தமிழ் பழமையான மொழி என்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டதை உளமார பாராட்டுகிறோம்: மு.க. ஸ்டாலின்..

 

தமிழ் பழமையான மொழி என்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டதை உளமார பாராட்டுகிறோம்: மு.க. ஸ்டாலின்..

பிரதமர் தமிழை புறக்கணிக்கவில்லை, அவர் தமிழின் தூதராகவே உள்ளார் என்ற கருத்து பரவலாக எழுந்த வண்ணம் உள்ளது. 

ஐ.நா சபையில் பிரதமர் நரேந்திர மோடி  3000ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்று பாடலை வைத்து மேற்கோள் காட்டி கூறினார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. மேலும், பிரதமர் தமிழை புறக்கணிக்கவில்லை, அவர் தமிழின் தூதராகவே உள்ளார் என்ற கருத்து பரவலாக எழுந்த வண்ணம் உள்ளது. 

 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ‘இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்றி தமிழை பெருமைப் படுத்துங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கழகத் தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள்’ என்ற அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தமிழ் தான் உலகில் பழமையான மொழி என்பதை பிரதமர் ஏற்றுப் போற்றியிருப்பதை திமுக சார்பில் உளமார வரவேற்கிறோம் என்றும், 8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.