தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

 

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

தமிழ் சினிமாவில் இரண்டு பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிமுகம் ஆக உள்ளனர்.

சென்னை: தமிழ் சினிமாவில் இரண்டு பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிமுகம் ஆக உள்ளனர்.

தமிழ் சினிமாவில் இரண்டு பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிமுகம் ஆக உள்ளனர். அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோர் ஆவார்கள். ‘ப்ரெண்ட்ஷிப்’ என்ற புதிய தமிழ் படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகம் ஆகவிருக்கிறார். அந்தப் படத்தின் போஸ்டரை சமீபத்தில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தாண்டு ரிலீசாக உள்ள இந்தப் படத்தை ஜான்பால் ராஜ் மற்றும் ஷ்யாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர். இந்தப் படத்தின் தொழில்நுட்ப குழு மற்றும் மற்ற நடிகர், நடிகையர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ttn

முன்னதாக, சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன் சிங் மட்டுமில்லாமல் பிரபல முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் 58-வது படத்தில் இர்பான் பதான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.