தமிழ் சினிமாவின் சாதனை நாயகி ரோஜா ஆந்திர அமைச்சராகிறார்..

 

தமிழ் சினிமாவின் சாதனை நாயகி ரோஜா ஆந்திர அமைச்சராகிறார்..

இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட நகரி தொகுதியில் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நடிகை ரோஜா இம்முறை அமைச்சராவது உறுதி என்று ஆந்திர அரசியல் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன.

இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட நகரி தொகுதியில் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நடிகை ரோஜா இம்முறை அமைச்சராவது உறுதி என்று ஆந்திர அரசியல் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன.

roja

ஆந்திராவில் ராயலசீமா பிராந்தியத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார். கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அப்போது ரோஜா மொத்தம் 1,58,201 வாக்குகள் பெற்றார்.

roja

ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு தாவினார். ஜெகன் மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். அது மட்டுமின்றி தேர்தல் அறிவுப்புகள் வராத சமயத்தில் கூட அடிக்கடி தொகுதிக்கு விசிடி அடித்து அடித்தட்டு மக்களின் அனைத்துப் பிர்ச்சனைகளுக்கும் போராட்டங்களின் மூலம் தீர்வு கண்டார். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்க அயராது பாடுபட்டார்.

roja jagan mohan reddy

இப்படி நகரி தொகுதி மக்களின் நாயகியாகவே மாறிப்போன ரோஜாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கண்டிப்பாக ஒரு முக்கிய இலாகா ஒதுக்கி அமைச்சராக்கி அழகுபார்ப்பார் என்று ஒட்டு மொத்த ஆந்திராவே அடித்துக்கூறுகிறது. தமிழ் சினிமாவில் சுமார் பத்தே ஆண்டுகளில் 150 படங்கள் நடித்த ஒரே நடிகை ரோஜாதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.