தமிழ் அகதிகளையும் சேர்க்க வேண்டும்! – ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் கோரிக்கை

தமிழ் அகதிகளையும் சேர்க்க வேண்டும்! – ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் கோரிக்கை

குடியுரிமை திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் இந்தியாவுக்கு குடிபெயரும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும்.

ravi shankar

இலங்கையில் இன ரீதியான பாதிப்பு என்றாலும் கூட இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள், சிங்களர்கள் பவுத்தர்கள். அவர்களும் இன, மத பிரச்னை காரணமாகவே தாக்கப்படுகின்றனர். பல லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களையும் இஸ்லாமியர்களையும் இந்த மசோதாவில் இணைக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

stalin

இந்த நிலையில், வாழும் கலை பிரபல சாமியார் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், “இந்தியாவில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இருக்கும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றி இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.