தமிழ்நாட பாலைவனமாக்கிட்டு இந்தியாவ சூப்பர் பவர் ஆக்க போறிங்க – காப்பான் டீசர்

 

தமிழ்நாட பாலைவனமாக்கிட்டு இந்தியாவ சூப்பர் பவர் ஆக்க போறிங்க – காப்பான் டீசர்

கேவி ஆனந்த் உடன் பழம்பெரும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் இணைந்து இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் சாயிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் காப்பான். இதில் மோகன் லால், ஆர்யா மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கேவி ஆனந்த் உடன் பழம்பெரும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் இணைந்து இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட பாலைவனமாக்கிட்டு இந்தியாவ சூப்பர் பவர் ஆக்க போறிங்க, போராடுறதே தப்புனா போராடுற சூழ்நிலைய உருவாக்குறதும் தப்புதானே, இப்படியான அரசியல் சார்ந்த வசனங்கள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மோகன் லால் இதில் பிரதமராக நடித்துள்ளார், அவரது பாதுகாப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்க:  காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஆண்கள் கொடுத்த கொடூர தண்டனை: வைரல் வீடியோ!