தமிழ்நாட்ல தண்ணிப் பஞ்சமா? ச்சேச்சே வாய்ப்பே இல்ல!

 

தமிழ்நாட்ல தண்ணிப் பஞ்சமா? ச்சேச்சே வாய்ப்பே இல்ல!

இந்த மருத்துவமனையில் மொத்தம் 837 படுக்கைகள் உள்ளன. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு. தாயும் சேயும் மட்டும் என கணக்கில் எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு 3300 பேருக்கு மேல் மருத்துவமனையில் தங்குகின்றனர். சுகாதாரமாக பராமரிக்கப்படவேண்டிய மருத்துவமனை வளாகமே கப் அடித்து கொண்டிருந்தால், ஏற்கெனவே நோய் தாக்குதல் காரணமாக உள்ளே வந்திருக்கும் குழந்தைகளும் பெற்றோரும் இன்னும் அதிக பாதிப்புக்கு ஆளாக மாட்டார்களா?

“மினிஸ்டர் சார், தமிழ்நாட்டில முக்கியமா சென்னையில தண்ணி தட்டுப்பாடு பயங்கரமா இருக்கே, இதுக்கு யார் காரணம்” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு மாண்புமிகு மந்திரியாரின் பதில்,  “தமிழ்நாட்டில் தண்ணிப் பஞ்சம் என எதிர்கட்சிகள் பொய் குற்றச்சாட்டு எழுப்புகின்றன. முந்தைய 2016-17 நிதியாண்டில் 243 லட்சம் லிட்டர்கள் விற்பனையான டாஸ்மாக் பீர், கடந்த 2018-19 நிதியாண்டில் 320 லட்சம் லிட்டர்களாக உயர்ந்திருக்கிறது. மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்….” செய்தியாளர்கள் இடைமறித்து, சார், நாங்க கேட்குறது குடிக்க தண்ணிப் பஞ்சமா இருக்குக்குறதைப் பத்தி என அவரை நிறுத்த, மந்திரியோ, “நான் கூட டாஸ்மாக்ல தான் தட்டுப்பாடு வந்துடுச்சோன்னு பயந்துட்டேன்” என்றாராம்.

Children Hospital

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் என்பதே இல்லை, எல்லாம் எதிர்கட்சிகளின் பொய்ப் பிரசாரம் என்ற அமைச்சர் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார். கிட்டத்தட்ட 175 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குளிக்க அல்ல, கழுவ கூட தண்ணீர் இல்லை என்பதை மந்திரியின் கனிவான கவனத்திற்கு யார் எடுத்து செல்வது? மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் டீக்கடையில் தண்ணீர் கேட்டால்கூட கடைகாரர், வேணும்னா டீயா வாங்கி குடிங்க, தண்ணி தனியா கிடையாது என்று சொல்லுமளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம்.

Clogged Toilets

இந்த மருத்துவமனையில் மொத்தம் 837 படுக்கைகள் உள்ளன. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு. தாயும் சேயும் மட்டும் என கணக்கில் எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு 3300 பேருக்கு மேல் மருத்துவமனையில் தங்குகின்றனர். சுகாதாரமாக பராமரிக்கப்படவேண்டிய மருத்துவமனை வளாகமே கப் அடித்து கொண்டிருந்தால், ஏற்கெனவே நோய் தாக்குதல் காரணமாக உள்ளே வந்திருக்கும் குழந்தைகளும் பெற்றோரும் இன்னும் அதிக பாதிப்புக்கு ஆளாக மாட்டார்களா? எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சுகாதார சீர்கேட்டை சுகாதாரத் துறை அமைச்சரிடம் போய்ச் சொன்னால், எழும்பூர் மருத்துவமனை தமிழக அரசு எல்லையிலேயே இல்லை, அது பீஹார், உ.பி. மாநிலத்திற்கு சொந்தமானது என சொன்னாலும் சொல்லுவார்!