தமிழ்நாட்டில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை – முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தமானது!

 

தமிழ்நாட்டில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை –  முதல்வர் பழனிசாமி  முன்னிலையில் ஒப்பந்தமானது!

எடப்பாடி பழனிசாமியை லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

லண்டன்: லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

edappadi

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குப் பயணமாக மேற்கொண்டுள்ளார் . புதிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்றும் முன்தினம்  சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் வழியே லண்டனை நேற்று அடைந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதை தொடர்ந்து லண்டனில் தொழில்துறைப் பிரதிநிதிகளை அவர் சந்தித்தார். பின்பு சுகாதாரத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 

edappadi

இந்நிலையில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக அதன் நிர்வாகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதை தொடர்ந்து  லண்டனில் ஆம்புலன்ஸ் இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.