‘தமிழ்நாட்டின் தலைமகனே’… குட்டித் தல பிறந்தநாளுக்கு மதுரையை கலக்கிய அஜித் ரசிகர்கள்!

‘தமிழ்நாட்டின் தலைமகனே’… குட்டித் தல பிறந்தநாளுக்கு மதுரையை கலக்கிய அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித், மனைவி ஷாலினி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கூடி கொண்டாடியுள்ளனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அஜித் ஒரு கோட் சூட்டில் ஸ்டைலிஷ் ஆக வந்திருந்தார்.  ஆத்விக் மீன் உடையில் உடையில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கேக் வெட்டினார்.

அஜித்தின் ரசிகர்கள் ‘குட்டித் தல ஆத்விக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என தமிழகம் முழுவதும் போஸ்டர் மற்றும் பேனர்கள் வைத்து கொண்டாடினர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் ஆத்விக்கிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் அஜித்திற்கு மதுரையில் தீவிர ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவரது பிறந்தநாள் வந்தால் போதும் மதுரையே திருவிழா கோலம் தான். தமிழக முதல்வரே, தமிழ்நாட்டின் தலையெழுத்தே என அவரை அரசியலுக்கும் இழுப்பார்கள். 

இப்போது, மதுரை அஜித் ரசிகர்கள் அவரது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் “ தமிழகத்தின் தலைமகனே வாழ்க பல்லாண்டு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதை ‘தல’ யின் மகனே என்று எடுத்துக்கொள்வதா இல்லை தமிழ்நாட்டிற்கே தலைமை தாங்கப்போகிறார் என எடுத்துக்கொள்வதா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்