தமிழ்நாடு மின்வாரியத்தில் 600 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 

தமிழ்நாடு மின்வாரியத்தில் 600 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்தமாக 600 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்தமாக 600 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. அதாவது, மின்னியல், இயந்திரவியல், கட்டிடவியல் ஆகிய 3 பிரிவுகளிலும் பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்து கொண்டிருந்தும், முன்னறிவிப்பு இல்லாததால் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையடுத்து, தமிழக மின்வாரியம் வரும் மார்ச் 16 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. 

ttn

மேலும் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளைத் தமிழில் நடத்தவும், அதற்கான விண்ணப்ப கால அவகாசத்தை 23ஆம் தேதி வரை நீடித்தும் உத்தரவிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பை பற்றித் தெரிந்து கொள்ள www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.