‘தமிழ்நாடு என்று பெயர் வைத்ததால் மட்டுமே தனிநாடாகி விடாது’ – எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு!

 

‘தமிழ்நாடு என்று பெயர் வைத்ததால் மட்டுமே தனிநாடாகி விடாது’ – எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு!

தமிழ்நாடு என்று பெயர் வைத்ததால் மட்டுமே தமிழகம் தனிநாடாகி விடாது என எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

கரூர்: தமிழ்நாடு என்று பெயர் வைத்ததால் மட்டுமே தமிழகம் தனிநாடாகி விடாது என எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், கரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர், ஆட்சியர் அன்பழகனை சந்தித்து பேசினார்.

அதன்பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் எஸ்.வி.சேகர் பேசுகையில், “ஃபேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்ததாக என் மீது 7,8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. எனக்கு ஒருவர் அனுப்பிய தகவலை வேறொருவருக்கு நான் அனுப்பினேன். அது எனது கருத்தோ, எழுத்தோ இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். இந்த பிரச்சனை தொடர்பாக என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ஒரே இடத்தில் நடத்தும் வகையில் வழக்கறிஞர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது. என்னை பொறுத்த வரையில் பா.ஜ.க. தலைமை விரும்பினால் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவேன். 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தபோது அவர் என்ன செய்யப்போகிறாரோ? என்று நினைத்தோம். நாம் நினைத்ததற்கு மேலாக தமிழக அரசை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். மத்திய அரசின் நிழலாக தமிழக அரசு செயல்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை” என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் கீழ்தான் மாநில அரசுகள் என்றும் தமிழ்நாடு என்று பெயர் வைத்ததால் மட்டுமே தனிநாடாகி விடாது, மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மாநில அரசுக்கு தேவையான நல்லது கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.