தமிழ்த்தாய் வாழ்த்தைத் தப்பு தப்பாகப் பாடிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் !

 

தமிழ்த்தாய் வாழ்த்தைத் தப்பு தப்பாகப் பாடிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் !

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் நேற்று அந்தந்த மாவட்டத்தில் பதவியேற்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் நேற்று அந்தந்த மாவட்டத்தில் பதவியேற்றனர். அதே போல, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேச்சுப்பாறை ஊராட்சியில் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்குப் பதவியேற்பு விழா நடைபெற்றது. வழக்கமாகத் தமிழகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதே போல, அந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

 

ttn

அப்போது, மைக்கை பிடுங்கிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஞானவேல் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவறாகப் பாடினார். அதனால், அவர் பாடுவதை நிறுத்தும் படி அங்கிருந்த அனைவரும் கூறினர். இது குறித்து அப்பகுதியில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, ‘கல்வியில் சிறந்த மாவட்டமாகக் கன்னியாகுமரி விளங்குகிறது. அங்குத் தமிழ்த் தாய் வாழ்த்து பாட ஒரு ஸ்கூல் பிள்ளை கூட இல்லையா? எல்லாந்தெரிஞ்ச மாதிரி பாடுற அந்த ஆள யாராவது பார்த்த மண்டையில் ஒரு கொட்டு வைச்சு நூறு தடவை எழுத வையுங்க’ என்று பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.