தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் தார் பூசி அழிக்கவும் தயார் : அமைச்சர் பாண்டிய ராஜன்

 

தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் தார் பூசி அழிக்கவும் தயார் : அமைச்சர் பாண்டிய ராஜன்

தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதாம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில்  அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலத்திலேயே பெயர் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதாம். அதாவது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகை வைத்தால் 5:3 என்ற விகிதத்திலும், மற்ற மொழி ஒன்றைச் சேர்த்து வைத்தால் 5:3:2 என்ற விகிதத்தில் வைக்க வேண்டுமாம். ஆனால், அதனை யாரும் பின்பற்றவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்தவையே. 

ttn

இந்நிலையில் சென்னை தரமணியில் நடைபெற்ற உலகத் தமிழாராய்சி நிறுவனம் சார்பில் நடத்தப் பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பாண்டிய ராஜன், தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகையைத் தமிழில் வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் பொறுப்பைத் தமிழ்த் துறையிடம் ஒப்படைக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தமிழில் பெயர் வைக்காத நிலையை தார் பூசி அழிக்கவும் தமிழ் வளர்ச்சித்துறை தயங்காது என்று தெரிவித்தார்.