தமிழில் படித்தால் வேலை இல்லை என்னும் நிலை இல்லை : அமைச்சர் பாண்டிய ராஜன்

 

தமிழில் படித்தால் வேலை இல்லை என்னும் நிலை இல்லை : அமைச்சர் பாண்டிய ராஜன்

பட்ஜெட் குறித்த இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் குடியுரிமை சட்டத்திருத்தம், இரட்டை குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட் குறித்த இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் குடியுரிமை சட்டத்திருத்தம், இரட்டை குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையைத் தமிழக அரசு அமைத்துத் தருமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், முன்பு திமுக ஆட்சி இருந்த போது மாவட்டம் தோறும் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகள் எல்லாம் நடைபெற்றது போல அதிமுக ஆட்சியிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

ttn

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டிய ராஜன், அரசு நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையைப் பல்கலைக்கழக அளவில் நடத்த வேண்டும் என்று அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முழு முயற்சியும் நடைபெற்று வருகிறது. தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற நிலை மாறி இப்போது மருத்துவியல், கல்வெட்டியல் உள்ளிட்ட 10க்கும் மேலான துறைகளைத் தமிழக அரசு உருவாக்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தர முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.