தமிழில் குடமுழுக்கு கேட்டு கெஞ்சுவது கேவலம்! – கொந்தளிக்கும் கவிஞர் தாமரை

 

தமிழில் குடமுழுக்கு கேட்டு கெஞ்சுவது கேவலம்! – கொந்தளிக்கும் கவிஞர் தாமரை

020ம் ஆண்டில் கூட கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தும்படி கெஞ்சுவது கேவலமாக உள்ளது என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வருகி பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை தமிழ் மறைப்படி நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள சைவ பக்தர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

2020ம் ஆண்டில் கூட கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தும்படி கெஞ்சுவது கேவலமாக உள்ளது என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வருகி பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை தமிழ் மறைப்படி நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள சைவ பக்தர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், ஆகம விதிமுறைப்படி குடமுழுக்கு நடைபெறும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

tanjore-big-temple

இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவில் விவகாரம் குறித்து கவிஞர் தாமரை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “22.1.2020. தமிழில் குடமுழுக்கு! தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்று, தமிழரின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்று, பெருமைமிகு சுற்றுலாத்தலம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், 2020 இல் நின்று கொண்டு ‘தமிழில் குடமுழுக்கு நடத்து’ என்று கெஞ்சிக் கொண்டிருப்பதே கேவலம். 
தஞ்சைக் கோயில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் வழிபாடு, குடமுழுக்கு நடைபெறுவது இயல்பாக்கப் படவேண்டும். இவையெல்லாம் போராடிப் பெற வேண்டியவை அல்ல, தானியாக உரிமையாக வர வேண்டியவை! தமிழக அரசே, போராட்டத்திற்கு இடம் தராமல், நீங்களே முன்வந்து தமிழில்தான் நடத்தப்படும் என அறிவித்து எங்கள் காதுகளில் தேன் பாய்ச்சுங்கள்.
பின்குறிப்பு : ‘தமிழில் நடத்த நாங்கள்தான் ஆணையிட்டோம்’ என்று அரசியல் செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு !. எதற்கு அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிக்குக் கொடுக்க வேண்டும் ? ?. தேர்தல் வருகிறதல்லவா?” என்று கூறியுள்ளார்.