தமிழில் அறிமுகமாவேன்: ‘கீதா கோவிந்தம்’ ஹீரோயின் ஓபன் டாக்!

 

தமிழில் அறிமுகமாவேன்: ‘கீதா கோவிந்தம்’ ஹீரோயின் ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் விரைவில் அறிமுகமாவேன் என ‘கீதா கோவிந்தம்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்: தமிழ் திரையுலகில் விரைவில் அறிமுகமாவேன் என ‘கீதா கோவிந்தம்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 63’ படத்தின் நாயகியாக தெலுங்கு பட நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமானார். இது இயக்குநர் அட்லியின் படம் என்பதால் மற்றொரு ஹீரோயினாக ‘மேயாத மான்’ இந்துஜா ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தளபதி 63 படத்தின் கனவு நாயகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா மந்தனா, தமிழ் திரையுலகில் விரைவில் அறிமுகமாவேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ’விஜய் சார், அட்லி சார் படத்தில் நான் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர். இந்த முறை அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால், நிச்சயமாக விஜய் சாருடன் நடிப்பேன். விரைவில் தமிழில் அறிமுகமாவேன். தனக்கு முழு ஆதரவு தரும் ரசிகர்களுக்கு ‘நன்றி’ என தமிழில் பதிவிட்டுள்ளார்.

ரேஷ்மிகாவின் இந்த ட்வீட் தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி அவரது தமிழ் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.