தமிழின் மீது திடீர் பாசம்… அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தடாலடி!

 

தமிழின் மீது திடீர் பாசம்… அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தடாலடி!

உலகில் செம்மொழியாக கருதப் படும் 7 மொழிகளில், தமிழ் மற்றும் சீன மொழியை தவிர வேறு எந்த மொழியும் பேசப் படுவதில்லை

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 18 ஆவது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துரையின் அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன், தமிழின் பெருமையை பற்றியும், தமிழ் பாதுகாக்கப் பட வேண்டும் என்றும் மாணவர்களிடம் உரையாற்றியுள்ளார். 

Minister Pandiyarajan

அப்போது அவர், ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள் தான் என்று கூறிய அவர் கெத்து, வெச்சு செய்வேன் என்ற வார்த்தைகள் சிலப்பதிகாரத்தில் உள்ளதாகவும் அதனை தெரிந்தோ தெரியாமலோ இளைஞர்கள் உபயோகிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். 

 இணைய தகவல் தொடர்பில் நாம் தமிழை பயன்படுத்தினால் மட்டுமே நம் மொழியை காக்க முடியும் என்றும் உலகில் புதியதாக பிறக்கும் அனைத்து வகை உயிரினங்களுக்கும் ஒரு மாத காலத்தில் தமிழில் பெயர் வைக்கப் படும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், உலகில் செம்மொழியாக கருதப் படும் 7 மொழிகளில், தமிழ் மற்றும் சீன மொழியை தவிர வேறு எந்த மொழியும் பேசப் படுவதில்லை என்பாதல் தமிழ்நாடு  இளைஞர்கள் செயற்படை வீரர்களாக செயல்பட்டு நம் தமிழ் மொழியை காக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன