தமிழிசை பேரச் சொன்னாலே சுகமா இருக்கும்: நடிகர் கார்த்திக் பகீர் ஸ்டேட்மெண்ட்

 

தமிழிசை பேரச் சொன்னாலே சுகமா இருக்கும்: நடிகர் கார்த்திக் பகீர் ஸ்டேட்மெண்ட்

தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

நான் அதிமுக கூட்டணியில் சேரக்கூடாது என்று ஒரு கும்பல் வேலை செய்தது, தமிழகத்தினை நேசிப்பவர்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டு என்று தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் .

தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

isai

டாக்டர் தமிழிசை பெயர் சங்கீதம் மாதிரி இருக்கு, அவர் பெயரை சொன்னாலே சுகமாக இருக்கும்,  நான் அவரை நேரில் பார்க்கும் முன்பே தொலைக்காட்சிகளில் பார்த்து இருக்கிறேன், நான் தமிழிசையின் ரசிகன், அவரின் கம்பீரம், அடக்கம் , நாகரீகம், அவரின் பேச்சில் இருக்கும் தன்மை, உண்மை பிடிக்கும் என்றார்.

தமிழ்

மேலும் அவர், நான் அதிமுக கூட்டணியில் சேரக்கூடாது என்று ஒரு கும்பல் வேலை செய்தது. அந்த கோழைகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், சிங்கத்தை உரசி பார்க்க வேண்டாம், அடங்கமால் பேசினால் என்னை அடக்க முடியாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உண்மையின் அருமை எப்படித் தெரியும், கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நல்லது கெட்டது எப்படி தெரியும். ரிசர்வ்  வங்கியிடம் பணம் அச்சடிக்கும் மிசின் எதுவும் திருடு போய்விட்டதா என்று கேட்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், நாடு வளம்பெற வேண்டும், கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும், மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்ற அந்த எண்ணமெல்லாம் எதிரணிக்கு கிடையாது. நல்லவர்களும் வல்லவர்களும், தேசப்பற்று உள்ளவர்களும் தாமரைக்கு வாக்களியுங்கள் என்றார்.

கார்த்திக்

அதன்பிறகு தொடர்ந்து வடக்குதிட்டங்குளம், இலுப்பையூரணி, எட்டயபுரம், இளம்புவனம் பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ உடனிருந்தார்.

 கார்த்திக் பேச்சை கேட்ட தமிழிசை, ஆயிரம் தாமரை மொட்டுகளை மலரச் செய்தவர் கார்த்திக் என அலைகள் ஓய்வதில்லை பாடலை குறிப்பிட்டு பேசினார்.

இதையும் வாசிக்க: வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா-நடக்காதா? ஆடு,புலி ஆட்டத்தைத் தொடங்கிய அ.தி.மு.க!