தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

 

தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு பரிசீலனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு பரிசீலனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேட்புமனுக்கள் பரிசீலனை 

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான மக்களவை  தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

தேர்தல்

நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1237 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 486 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒத்திவைப்பு 

இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என திமுக புகார் அளித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழிசையின் வேட்பு மனு மீதான பரிசீலனை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதையும் படிங்க 

39 தொகுதிகள் ;1237 வேட்புமனுக்கள் – நேற்றுடன் முடிந்த வேட்பு மனுத் தாக்கல்

தேர்தலுக்கு வாங்கப்பட்ட மை பாட்டில்களுக்கு ஆன செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?