தமிழிசை அக்கா.. நீங்க ஏன் பிஜேபி தலைமையில் யாகம் நடத்தலை..!?

 

தமிழிசை அக்கா.. நீங்க ஏன் பிஜேபி தலைமையில் யாகம் நடத்தலை..!?

வெதர்மேன் பிரதீப் புண்ணியத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக சென்னையில் சில இடங்களில் மழைத் தூரல் விழும். சில நாட்களுக்கு சென்னை முழுவதுமே இப்படி மழை பெய்யும் என்னும் அறிவிப்பு வந்ததும்

தமிழகம் இன்னமும் வறட்சியான மாநிலமாக அறிவிக்கப்படவில்லை… மற்றபடி தண்ணீர் பஞ்சத்தில் கூடிய விரையில் இன்னொரு சோமாலியாவாக உருவெடுக்கும் சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. சென்னையில் ஏற்கெனவே இருக்கிற பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் ஆரம்பித்து உணவகங்கள், மேன்ஷன்கள் வரையில் எல்லோரும் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இழுத்து பெரிய பூட்டாக பூட்டி, ஊரை காலிச் செய்து வருகிறார்கள்.

இப்படியான சூழலில், இன்னும் ஐந்து நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என்று அறிவித்து பாலைவன மனசை காட்டியது சென்னை வானிலை அறிக்கை. வெதர்மேன் பிரதீப் புண்ணியத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக சென்னையில் சில இடங்களில் மழைத் தூரல் விழும். சில நாட்களுக்கு சென்னை முழுவதுமே இப்படி மழை பெய்யும் என்னும் அறிவிப்பு வந்ததும், அவசர அவசரமாய் அதிமுக அமைச்சர்கள் குழு, மழை வேண்டி யாகம் வளர்க்கும் காஸ்ட்லி ஐடியாவை  செயல்படுத்த ஆரம்பித்தார்கள். வெதெர்மேன் பிரதீப்

இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், மழை பெறுவதற்காக அனைத்து மதத்தினரும் வழிபட்டு வரும் நிலையில், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். யாகம் நடத்தினால் மழை வரும். போராட்டம் நடத்தினால் மழை வருமா? என்றும் கேள்வி எழுப்பினார்.அதிமுக நடத்திய யாகத்தினால் தான் மழை வந்தது.  நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளுக்கு உறுதுணையாக இருந்தது திமுக தான் என்றும் குற்றம் சாட்டினார். 

தமிழிசை அக்கா… இந்த யாகத்தை போன மாசமே பிஜேபி தலைமையில் நீங்க நடத்தியிருக்க கூடாதா? என்று முணுமுணுத்தப்படியே நிருபர்கள் கலைந்து சென்றார்கள்.