தமிழிசையை ஓரம் கட்டும் பாஜக… நேரடி அரசியலை தடுக்க சதி..!

 

தமிழிசையை ஓரம் கட்டும் பாஜக…  நேரடி அரசியலை தடுக்க சதி..!

தமிழிசையை மாநிலங்களவை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சர்பொறுப்பு தருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆளுநர் பொறுப்பு வழங்கியதே அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டத்தான்என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்துள்ளது.

தெலங்கானா, ஆந்திரா என ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டபோதிலும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான இ.எஸ்.எல்.நரசிம்மனே இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வந்தார். சமீபத்தில்தான் ஆந்திராவுக்குப் புதிய ஆளுநராக பிஸ்வாபுஷன் ஹரிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, தற்போது தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது.Tamilsiai

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டவுடன், தமிழக பா.ஜ.க-வின் அடுத்தமாநிலத் தலைவர் யார்? என்கிற விவாதம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பி.ஜே.பி. மாநில நிர்வாகி ஒருவர், “முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கான வாய்ப்பும்பரிசீலனையில் உள்ளது.

புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், கட்சியின் இமேஜை மாற்றலாம் என்கிறகருத்தும் டெல்லித் தலைமைக்கு இருப்பதால், கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி.நரசிம்மன், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் ஆகியோரின் பெயர்களும்பரிசீலனையில் உள்ளன” என்றார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களைவிட இங்கு வேறு வகையான அரசியல் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறாராம் பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா. தமிழகத்தில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் உள்ள பட்டியலின மக்களின் பிரதிநிதியாகக் குறிப்பிடும்படி, பி.ஜே.பி-யில் இதுவரையில் பெரிய தலைவர்கள் இல்லை. அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு அளிப்பதால், பட்டியலின வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் எனவும் பி.ஜே.பி. கணக்குப்போடுகிறதாம். ‘யாரும் எதிர்பார்க்காத ஒருவர்தான் சர்ப்ரைஸாக தலைவராவார்’என்கிறது டெல்லி பி.ஜே.பி. வட்டாரம்.tamilisai

இதனிடையே, தமிழிசையை மாநிலங்களவை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சர்பொறுப்பு தருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆளுநர் பொறுப்பு வழங்கியதே அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டத்தான்என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்துள்ளது. இனி நேரடி அரசியலில் தமிழிசை ஈடுபட முடியாது என்பதையும் அவர்கள் சுட்டிக்க்காட்டுகிறார்கள்.

ஆயிரம் எதிர்கருத்துக்கள் எழுந்தாலும், தன் உடல் ரீதியிலான விமர்சனங்களையும் தைரியமாக எதிர்க்கொண்டு, தமிழகத்தில் பி.ஜே.பி. இருப்பதை பட்டித்தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியவர் தமிழிசை.  அவரது உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாகத்தான் இதைப் பார்க்க முடியும் என சொல்வோரும் உண்டு.