‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’ : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்

 

‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’ : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்

தமிழகத்தைப்  பூர்வீகமாகக் கொண்ட மித்தாலி ராஜின்  தந்தை நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.

தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ்  தெரிவித்துள்ளார். 

mithali

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவுள்ளனர். இந்திய அணிக்காக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மித்தாலி ராஜ்,  ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.மேலும் 20 ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார் மித்தாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகக் காலம் விளையாடிய வீராங்கனையாகவும் திகழ்கிறார். இவரது வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் தொடர்ந்து அவரை விமர்சித்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்நிலையில்  மித்தாலி ராஜுக்கு தமிழ் தெரியாது. அவருக்கு தெலுங்கு மற்றும் இந்தி தான் பேச தெரியும் என்று நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மித்தாலி ராஜ்  தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழ் என் தாய் மொழி..நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’ என்று பதிவிட்டுள்ளார்.

mithali raj

தமிழகத்தைப்  பூர்வீகமாகக் கொண்ட மித்தாலி ராஜின்  தந்தை நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். விமானப்படையில் பணிபுரிந்த அவரின் தந்தையின் பணியிட மாறுதலுக்காக அவர்கள் குடும்பம் ராஜஸ்தான் சென்றது. இதனால்  ஜோத்பூரில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி மித்தாலி பிறந்தார், அவர் பள்ளிப்படிப்பை செகந்திராபாத்தில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.