தமிழக மூலிகைகள் கேரளாவுக்கு கடத்தல்! பிடிபட்டவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

 

தமிழக மூலிகைகள் கேரளாவுக்கு கடத்தல்! பிடிபட்டவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

தமிழகத்தில் சித்த மருத்துவத்தையும், மூலிகைச் செடிகளின் பயன்களையும் இந்த தலைமுறையினர் மறந்து விட்டாலும், அண்டை மாநிலங்களில் ஆரம்பித்து அமெரிக்கா வரை நமது பாரம்பரிய மூலிகை செடிகளின் மகத்துவத்தையும், யோகா, மூச்சுப்பயிற்சி, பரதம் போன்றவைகளின் நன்மைகளையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆன்லைனில் ஒரு பானை நிறைய பழைய சோறும், பத்து உரித்த சின்ன வெங்காயமும், 7,000 ரூபாய்களுக்கு வெளிநாடுகளில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சித்த மருத்துவத்தையும், மூலிகைச் செடிகளின் பயன்களையும் இந்த தலைமுறையினர் மறந்து விட்டாலும், அண்டை மாநிலங்களில் ஆரம்பித்து அமெரிக்கா வரை நமது பாரம்பரிய மூலிகை செடிகளின் மகத்துவத்தையும், யோகா, மூச்சுப்பயிற்சி, பரதம் போன்றவைகளின் நன்மைகளையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆன்லைனில் ஒரு பானை நிறைய பழைய சோறும், பத்து உரித்த சின்ன வெங்காயமும், 7,000 ரூபாய்களுக்கு வெளிநாடுகளில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நன்றாக ஒரே அளவில் நறுக்கப்பட்டு, கட்டாக கட்டப்பட்டு பேக் செய்யப்பட்ட வேப்பங்குச்சிகள், இயற்கை பல்துலக்கி என்கிற பெயரில் 50 டாலர்களுக்கு விற்று வருகிறார்கள். 

herbs

இந்த தகவல்கள் எல்லாம் எதுக்குன்னு கேட்கறீங்களா…  நம் தமிழகத்தின் பொள்ளாச்சி பக்கத்தில் இருக்கும் வடக்கிபாளையம் சாலையில் நேற்று மாலை மினி ஆட்டோ ஒன்று, குவியல் குவியலாக மூலிகைச் செடிகளை அடக்க முடியாமல் அடக்கியபடி சென்று கொண்டிருந்தது. ஆட்டோ நிறைய செடிகளைப் போட்டு எதற்காக எடுத்துச் செல்கிறார்கள் என்று அப்பகுதியில் இருந்த இயற்கை ஆர்வலர்கள் சிலர் ஆட்டோவை மடக்கி விசாரித்தனர்.
அவர்களின் விசாரணையில், பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாய தோட்ட வேலிகளில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகளையும், சாலையோரங்களில் உள்ள அரிய வகைச் செடிகளையும் வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்கு எடுத்துச் செல்வதாக ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார்.
பாலாக்காடு பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு இந்த செடிகளை எல்லாம் கொண்டுச் சென்று கொடுத்தால், அவர்கள் ஆயுர்வேத  மருந்து தயாரிக்க இந்த செடிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் பொள்ளாச்சி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூலிகைச் செடிகளையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மூலிகைகளையும் வாகனத்தையும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

herbs

தமிழ்நாட்டிலுள்ள மூலிகைச் செடிகளை பிடுங்கி, கேரளாவைச் சேர்ந்த தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் மூலிகை மருந்தாக தயாரித்து , தமிழகத்திலேயே விற்பனை செய்வது தமிழகத்தில் உள்ள மூலிகைச் செடிகளை அழிக்கும் நடவடிக்கை என்றும், எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஜயராகவன் என்ற இயற்கை ஆர்வலர் கூறியுள்ளார்.