தமிழக முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்கள் முழு விபரம் வெளியானது

 

தமிழக முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்கள் முழு விபரம் வெளியானது

தமிழக முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்கள் முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்கள் முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்கள் முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 13 வரை மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 7 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி அளித்தவர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ttn

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேலாக நிதி வழங்கியுள்ளது. அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு (ரூ.5 கோடி), ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (ரூ.5 கோடி), சோழமண்டலம் இன்வெஸ்ட்மன்ட் (ரூ.3 கோடி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் (ரூ.2 கோடி), டியூப் இன்வெஸ்ட்மன்ட்ஸ் (ரூ.2 கோடி), அதிமுக (ரூ.1 கோடி), காமராஜர் துறைமுகம் லிமிடெட் (ரூ.1 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (ரூ.1 கோடி), ஈச்சர் குரூப் (ரூ.1 கோடி) ஆகிய நிறுவனங்கள் நிதி அளித்துள்ளன.

ttn

ttn

நடிகர்களில் அஜித் ரூ.50 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சமும் நிதி அளித்துள்ளனர். மேலும் டால்மியா சிமென்ட் பாரத் லிமிடெட் (ரூ.50 லட்சம்), ஏ.ஜி.எஸ் (ரூ.50 லட்சம்), கோரமண்டல் எலக்ட்ரிக் கம்பெனி லிமிடெட் (ரூ.50 லட்சம்), தி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்(ரூ.50 லட்சம்), OLA பவுண்டேசன்(ரூ.50 லட்சம்), செயின்ட் கொபென் (ரூ.50 லட்சம்), சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் (ரூ.25 லட்சம்), P&C புரோஜெக்ட்ஸ் (ரூ.25 லட்சம்), ரெப்கோ ஹோம் பைனான்ஸ் (ரூ.25 லட்சம்),R.அனந்தகிருஷ்ணன்(ரூ.25 லட்சம்),டோட்லா டைரி லிமிடெட் (ரூ.25 லட்சம்) உள்ளிட்ட இன்னும் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், தொழிலதிபர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.