தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வேதாந்தா குழுமம் ரூ.5 கோடி வழங்கல்

 

தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வேதாந்தா குழுமம் ரூ.5 கோடி வழங்கல்

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வேதாந்தா குழுமம் ரூ.5 கோடி வழங்கி உள்ளது.

தூத்துக்குடி: தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வேதாந்தா குழுமம் ரூ.5 கோடி வழங்கி உள்ளது.

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வேதாந்தா குழுமம் ரூ.5 கோடி வழங்கி உள்ளது. இக்குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் நபர்களுக்கு உதவும் வகையில், தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கியுள்ளனர். அந்த வகையில் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

vedanta group

மேலும் 10 சுய உதவி குழுக்களுடன் இணைந்து முகக் கவசம், கிருமி நாசினி தயாரித்து, தூத்துக்குடியில் உள்ள 20 கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை சார்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு 200 செட் பாதுகாப்பு உபரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 200 செட் உபகரணங்கள் தயாராகி வருகிறது.

தூத்துக்குடியில் சுமார் 5200 வீடுகளுக்கு இதுவரை 3000 முகக் கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 2000 முகக் கவசங்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்தில் லாரி ஓட்டுனர்களுக்கு 1300 லிட்டர் ஹேண்ட்வாஷ், 13 ஆயிரம் பார் சோப்புகள், 1000 ஹேண்ட் சானிட்டைசர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.