தமிழக மீனவர்கள் கைது… மீண்டும் ஆரம்பமானது இலங்கையின் அட்டூழியம்

 

தமிழக மீனவர்கள் கைது… மீண்டும் ஆரம்பமானது இலங்கையின் அட்டூழியம்

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்கள், தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் என அனைவரும் இவ்விவகாரத்திற்காக கடிதம் எழுதினரே தவிர தீவிரமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை, அவர்கள் வைத்திருந்த படகுகளுடன் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் நிகழ்ந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற அடுத்த நாளே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறிது காலம் ஓய்ந்திருந்த மீனவர்கள் கைது தற்போது மீண்டும் தொடர்ந்திருப்பதால் மீனவர்கள் அச்சமும், வேதனையும் அடைந்துள்ளனர்.