தமிழக மாணவி கனடாவில் தாக்கப்பட்டார் -உயிருக்கு போராடுபவரை பார்க்க, விசாவுக்கு போராடும் குடும்பம் .. 

தமிழக மாணவி கனடாவில் தாக்கப்பட்டார் -உயிருக்கு போராடுபவரை பார்க்க, விசாவுக்கு போராடும் குடும்பம் .. 

கனடாவில் தமிழக மாணவியை மர்மமனிதன் கத்தியால் குத்தினான், அவரின் குடும்பம் உயிருக்கு போராடும் அவரை பார்க்க கனடா போக விசாவிற்கு MEA உதவியை நாடுகிறது. டொரொன்டோ போலிஸின் கூற்றுப்படி,மாணவி  ரேச்சல் கல்லூரி வளாகத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது ஒரு நபர் அவரை  தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர் பலத்த கத்தி குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

man-stabs-woman

கனடாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், டொராண்டோவில் வியாழக்கிழமை தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி கத்தியால் குத்தப்பட்டார். அடையாளம் தெரியாத நபரால்   தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த மாணவி, அவரது குடும்பத்தின் கூற்றுப்படி ,  அவர் அனுமதிக்கப்பட்ட சன்னிபிரூக் சுகாதார அறிவியல் மையத்தின் தீவிர  பராமரிப்பு பிரிவில் தொடர்ந்து இருக்கிறார்.  உயிருக்கு போராடும் மாணவி  ரேச்சலை பார்க்க கனடாவுக்குச் செல்ல,  விசாவிற்கு அவரது குடும்பத்தினர் வெளிவிவகார அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கரின் உதவியை நாடியுள்ளனர்.

யார்க் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்டிகிரி மாணவரான ரேச்சல் ஆல்பர்ட் தனது வளாகத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் அவளைத் தாக்கியதாகவும், அவளைத் தள்ளி இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. , புதன்கிழமை இரவு 10.00 மணியளவில் லீச் அவென்யூ மற்றும் அஸ்ஸினிபொயின் சாலையில்  இந்த சம்பவம் நிகழ்ந்தது.

toronto-police

ரேச்சலின் சகோதரி ரெபேக்காவின் கூறுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்க விசாவைப் பெற எனது குடும்பத்தினர் முயன்று வருகிறார்கள் . விசா செயல்முறை சிக்கலானது என்பதால் நாங்கள் இன்னும் அதைப்  பெற போராடி வருகிறோம் , அதற்காக நாங்கள் வெளிவிவகார அமைச்சரின் உதவியை நாடுகிறோம். ”என்றார் 

குடும்பத்தின் கூற்றுப்படி, மூளைக்கு இரத்தம்  போவதை  துண்டிக்கும் வகையில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.  கழுத்துப் பகுதியில் பல முறை குத்தப்பட்டதாகத் தெரிகிறது, தவிர இருபுறமும் கீறல்கள் உள்ளன என்று  ஒரு டாக்டராக இருக்கும் அவரது சகோதரி கூறினார்.

 மாணவி ரேச்சல் தற்போது கனடாவில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்டை பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையில்  பயின்று வருகிறார். அவர் இந்த ஆண்டு மே மாதம் பட்டம் பெற உள்ளார். “அவள் மேலும்  பகுதிநேர வேலையும்  செய்து கொண்டிருந்தாள்” என்று அவரது சகோதரி கூறுகிறார். அவர் எதற்காக ,யாரால் தாக்கப்பட்டார் என்ற விவரம் இது வரை தெரியவில்லை .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.