‘தமிழக மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ – பிரதமர் மோடி ட்வீட்

 

‘தமிழக மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ – பிரதமர் மோடி ட்வீட்

கஜா புயல் பாதிப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

டெல்லி: கஜா புயல் பாதிப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது, நேற்றிரவு 11 மணியளவில் தமிழகத்தின் கடலோரத்தைத் தொட்டது. நள்ளிரவு 12.30 மணியளவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்க தொடங்கியது.

அப்போது முதல் அதிகாலை 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தது.

இருப்பினும், கஜா புயலில் கோரத் தாண்டவத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயலின் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும், தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழக மக்களின் பாதுகாப்பிற்கும், நலனுக்கும் தான் பிரார்த்தனை செய்வதாகவும் தன் ட்வீட்டில் மோடி குறிப்பிட்டுள்ளார்.