தமிழக + புதுச்சேரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர்கள்

தமிழக + புதுச்சேரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர்கள்

திமுக வேட்பாளர்களான சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), கலாநிதி வீராசாமி (வட சென்னை), டி.ஆர். பாலு (ஸ்ரீபெரும்பத்தூர்), கெளவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்) ஆகியோரின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், நாமக்கலில் போட்டியிட்ட சின்ராஜ் ஆகியோரின் வெற்றியும் உறுதி செய்யபட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்களான செல்வகுமார் (கிருஷ்ணகிரி), திருநாவுக்கரசர் (திருச்சி) ஆகியோரின் வெற்றி செய்தியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை சோளிங்கர் மற்றும் நிலகோட்டை தொகுதிகளை அதிமுக கைப்பற்றி உள்ளது. அரவக்குறிச்சி திமுக வசமானது. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்