தமிழக பா.ஜ.க தலைவர் நியமனம் எப்போது? – கொந்தளிக்கும் தொண்டர்கள்

 

தமிழக பா.ஜ.க தலைவர் நியமனம் எப்போது? – கொந்தளிக்கும் தொண்டர்கள்

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், அவர் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை தமிழக பா.ஜ.க தலைவராக கொண்டுவர டெல்லி பா.ஜ.க திட்டமிட்டது.

தமிழக பா.ஜ.க-வுக்கு பல மாதங்களாக தலைவர் இல்லாத நிலையில், கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், அவர் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை தமிழக பா.ஜ.க தலைவராக கொண்டுவர டெல்லி பா.ஜ.க திட்டமிட்டது. ஆனால், அவர் பிடிகொடுக்காத நிலையில் தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படவே இல்லை. அதற்குள்ளாக பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் தலைவர் பதவிக்கு மோதிவந்தனர். கடைசியில் எச்.ராஜாவுக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டது. 
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழக பா.ஜ.க தலைவர் நியமனம் இருக்கும் என்று கூறப்பட்டது. டெல்லியில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தததில் மூத்த நிர்வாகிகள் அப்செட்டாக உள்ளனர். இதனால், தமிழக பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கேரளா, மத்தியப் பிரதேசம், சிக்கம் மாநில பா.ஜ.க தலைவர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

h.raja

குறிப்பாக கேரள மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சுரேந்திரனின் பின்னணி எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் எப்படி வன்முறைக் கருத்துக்களை கூறி பிரச்னையை உருவாக்க எச்.ராஜா முயல்கின்றாரோ, அதை கேரளாவில் சாதித்துக் காட்டியவர் சுரேந்திரன். சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் வன்முறை போராட்டங்களை தீவிரப்படுத்தியவர் சுரேந்திரன். வன்முறை, குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடுவதில் பிரபலமான சுரேந்திரன் கேரள மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அதேபோன்ற அரசியலை மேற்கொள்ளும் எச்.ராஜா தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ponradhakrishnan

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், விரைவில் தமிழக பா.ஜ.க தலைவரை நியமிக்க வேண்டும். அதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, பெரும்பான்மை சமுதாய மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று பா.ஜ.க-வினர் கூறுகின்றனர். இன்னும் எத்தனை காலத்துக்கு தலைவர் இல்லாமல் செயல்பட முடியும் என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.