தமிழக பாஜக தலைவராகிறார் அதிமுக முன்னால் எம்.பி… எடப்பாடிக்கு செக்..!

 

தமிழக பாஜக தலைவராகிறார் அதிமுக முன்னால் எம்.பி… எடப்பாடிக்கு செக்..!

MP in front of AIADMK to become BJP leader

ஜெயலலிதா அ.தி.மு.க.வை ஆண்டபோது, அவரது மனசாட்சியாக டெல்லியில் செயல்பட்டவர் மைத்ரேயன். சசிகலாவை தவிர வேறு யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிடாத ஜெயலலிதா, மைத்ரேயனை நம்பி மிக மிக முக்கியமான அசைன்மெண்ட்களை கொடுப்பார். இவரும் மிக கச்சிதமாக டெல்லியில் அதை முடிப்பார்.

இதன் மூலம் ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய அளவிலான நன்மைகள் நடந்தேறும். இதனால் தொடர்ந்து மைத்ரேயனை எம்.பி. பதவி செல்வாக்கிலேயே அமர்த்தியிருந்தார் ஜெ. ஆனால் தன்னை தாண்டி ஜெயலலிதாவிடம் மைத்ரேயன் கோலோச்சியதில் சசிகலாவுக்கு விருப்பமில்லை. மைத்ரேயனை முறைத்துக் கொண்டேதான் இருந்தார்.maitreyan

இந்த நிலையில் ஜெ., மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏறப்பட்ட குழறுபடிகளின் ஒரு நிலையாக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை துவக்கினார். சசிகலா தரப்புக்கு எதிராக நடந்த இந்த அரசியலில் மிக முழுமையாக தனது ஆதரவை கொடுத்தார் மைத்ரேயன். பன்னீர்செல்வத்தின் எழுச்சிக்காக, பி.ஜே.பி. அரசில், மோடியின் வட்டாரத்தில் மைத்ரேயன் செய்த மேஜிக்குகள் அசாதாரணமானவை.

ஆனால், அணிகள் இணைந்து ஓ.பி.எஸ். துணை முதல்வரானார். ஆனால் மைத்ரேயனுக்கு உரிய மரியாதைகள் கிடைக்கவில்லை. இதனால்தான் அணிகள் இணைந்த மூன்று மாதங்களுக்குப் பின் ‘அணிகள் இணைந்தன. ஆனால் மனங்கள்?’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக எழுதி, உட்கட்சி பஞ்சாயத்தை திரை கிழித்துக் காட்டினார் மைத்ரேயன்.

பன்னீருக்கு மாநில அரசியலில் பஞ்சாயத்து நேரும் போதும், மத்திய அரசு அவர் மீது கோபம் கொண்ட போதும் இடையில் புகுந்து தீர்த்து வைத்தவர் மைத்ரேயனே. இந்த நிலையில் மைத்ரேயனின் எம்.பி. பதவி முடிந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நெக்குறுகி உரையாற்றியவர் “டெல்லி அரசியலில் எனக்கு இது அஸ்தமனம். ஆனால், மாநில அரசியலில் எனக்கு இனிதான் சூர்யோதயம்” என்றார். இதைத்தான் கையில் எடுத்து வைத்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்.admk

“மைத்ரேயனை தி.மு.க. வளைத்துவிட்டது. தான் தி.மு.க.வில் இணைய இருப்பதைத்தான் சூசகமாக சொல்லியுள்ளார். மைத்ரேயன் சாணக்கிய அரசியல்தனத்தில் பெரும் புள்ளி. அவர் கையில் இருந்தால் அ.தி.மு.க.வை வீழ்த்திட பெரும் பலம் கிடைக்கும், ஆட்சிக்கு வந்த பின் பி.ஜே.பி. அரசை அணுசரிக்கவும் பெரியளவில் உதவிகரமாக இருக்கும் என்பது ஸ்டாலினின் கணக்கு.

அது மட்டுமில்லாமல் ஓ.பன்னீர்செல்வத்தின் நிழலாக, மனசாட்சியாக இருந்தவர் மைத்ரேயன். அவரது ரகசியங்கள் எல்லாமே மைத்ரேயனுக்கு அத்துபடி. இப்போது ஓ.பி.எஸ். தனக்கான உரிய மரியாதையை கழகத்தில் பெற்றுத்தரவில்லை எனும் கடுப்பில் இருக்கும் மைத்ரேயனை பெரிய மரியாதை கொடுத்து அழைத்துக் கொண்டால், நாளைக்கு பன்னீருக்கு செக் வைக்கவும், தென் தமிழகத்தில் பன்னீரை டம்மி பண்ணி அதிக தொகுதிகளை அள்ளவும் வசதியாக இருக்குமென ஸ்டாலின் நம்புகிறார்.

இது உள்ளிட்ட பல கணக்குகளை போட்டே மைத்ரேயனை மடக்கிவிட்டனர். தி.மு.க. ஆட்சியமைக்க அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், ஆட்சி அமைந்தபின் அமைச்சர் பதவிக்கு நிகரான வாரிய தலைவர் பதவி வழங்கப்படுமென தெரிகிறது. யார் கண்டார்கள்? எம்.எல்.ஏ.வாக்கி அமைச்சருமாக்கிவிடுவர்.” என்று நிறுத்தினர்.maitreyan

ஆனால் வேறு சிலரோ இதற்கு நேர் எதிராக பேசுகின்றனர். அவர்கள் “ மைத்ரேயன் இந்துத்வத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ஜெயலலிதா இவர் மீது நம்பிக்கை வைக்கவும், மோடி இவரை அரவணைக்கவும் இதுதான் காரணம். அப்படிப்பட்ட மைத்ரேயன் பகுத்தறிவு எனும் பெயரில் இந்து எதிர்ப்பு பேசும் தி.மு.க.விடம் சரணடைய மாட்டார்.

அவர் பி.ஜே.பி.யில் இணைய இருக்கிறார். தமிழகத்தில் கட்சியை வளர்க்க சரியான தலைமையின்றி தவிக்கும் பி.ஜே.பி.யின் தேசிய தலைமை, இவரை தமிழகத்துக்கான ரைட் சாய்ஸாக நினைக்கிறது. எனவே மைத்ரேயன் பி.ஜே.பி.யில் கலந்து, தமிழக தலைவராகிறார்.” என்கின்றனர்.