தமிழக பட்ஜெட் 2019-2020 : முக்கிய அறிவிப்புகள் இதோ!

 

தமிழக பட்ஜெட் 2019-2020 : முக்கிய அறிவிப்புகள் இதோ!

  2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சென்னை:  2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். 

2019-2020 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்!

  • தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல்
  • வரும் நிதி ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் 3.97 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
  • விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு 
  • சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்க ரூ.3958 கோடி ஒதுக்கீடு
  • வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுக் காப்பீடு திட்டம்
  • விபத்து மூலம் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு நிவரணமாக 4 லட்சம் ரூபாயும், நிரந்தர ஊனத்திற்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். 
  • சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக 3,958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு, குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு, வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு
  •  தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் – ஓ.பன்னீர் செல்வம்
  • வருவாய் துறைக்கு மொத்த ரூ.6106.95 கோடி ஒதுக்கீடு 
  • வரும் நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் புதிதாக பயிர்கள் சேர்க்கப்படும்
  • இடி மின்னல், திடீர் மழை, இயற்கை தீயால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயிர் காப்பீடு கிடைக்க நடவடிக்கை
  • காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.621.59 கோடி ஒதுக்கீடு
  • சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் உயர்தர சேவைகளை பெறும் வகையில் உட்கட்டமைப்புகளை அரசு மேம்படுத்தி வருகிறது
  • அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- பட்ஜெட் அறிவிப்பு
  • அண்ணா பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்
  • ஒட்டுமொத்த உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு 51.8 சதவீதம் ஆக உள்ளது.
  • திருமங்கலத்தை தலையிடமாக கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய் கோட்டம்
  • மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும்
  • மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும்
  • தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அளிக்கும்
  • சொற்பமாக உள்ள நில ஆதாரங்களை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மாநில நில பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது