தமிழக பட்ஜெட் தாக்கல்: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி; கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு!

 

தமிழக பட்ஜெட் தாக்கல்: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி;  கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு!

அதிமுகவின் கடைசி பட்ஜெட் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இந்தாண்டுடன்  அதிமுகவின் கடைசி பட்ஜெட் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

ttn

இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில்  துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட்  உரையை வாசிக்க தொடங்கினார். அதில்  தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:-

  •  பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு
  •  மீன்வளத்துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு
  •  வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு
  • எரிசக்தி துறைக்கு 20,115.58 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்திலுள்ள அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் . இதற்காக 75.02 கோடி ரூபாய்  ஒதுக்கீடு என அறிவிப்பு
  • திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்
  • கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு
  •  அம்மா உணவகம் ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு

ttn

  • இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இதற்காக  3041 கோடி ரூபாய்  ஒதுக்கீடு
  •  திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில்  ரூ.77.94 கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும். 
  •  அது சுமார் 53.36 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் என அறிவிப்பு
  •  தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாகத்திட்டத்தின் கீழ் 75 கோடி ரூபாய் செலவில் புதிதாக  500  நிறுவனங்கள் அமைக்கப்படும்.