தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

 

தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 

சென்னை: 2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தது. இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள  சட்டப்பேரவையில் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை   துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டானது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் என்ற முறையில் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல் நிதிநிலை அறிக்கையை சுமார் 2மணிநேரம் வாசிப்பார் என்று தெரிகிறது. 

மக்களவை தேர்தல் சில மாதங்களில் வர உள்ள நிலையில், வாக்குகளை குறிவைத்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியான திமுக கேள்வி எழுப்பும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சபாநாயகர் அதை மறுக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.