தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்!!

 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்!!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக தலைமையில் கூட்டணி அமைகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்து, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக-பாமக-பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்தும், திமுக-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கவுள்ளன.

அதேபோல், மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் துவங்கியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.