தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை

 

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அவர் பேசுகையில், “தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி.. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை; இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.

தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும்.

இருப்பினும் மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவர் இன்று வரை நியமிக்கப்படவில்லை; முழு நேர தலைவரை நியமிக்க தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன்?” என உரையாற்றியுள்ளார்.

மேலும், கஜா புயல் குறித்து பேச ஸ்டாலின் கேட்ட அனுமதிக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.