தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.  ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் ஜவரி 6ஆம் தேதி காலை சட்டப்பேரவை கூடுகிறது. ஆளுநர் ஆங்கில உரையை படித்தபின், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தமிழில் படிப்பார் எனக்கூறப்படுகிறது. ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் , மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tn assembly

கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது  குறித்து வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.