தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரை

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 2-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தொடங்கிய கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்கிறது. அதனை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடித்தல் ஊக்குவிக்கப்படும். ஜெயலலிதாவின் நல்லாட்சியை தர முயலும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்கள். ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு இந்த ஆண்டும் விருது. அத்திக்கடவு அவினாசி திட்டம் முதல்வரால் விரைவில் தொடங்கி வைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தை தமிழகம் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. திடக்கழிவு மேலாண்மையை கிராம பஞ்சாயத்துவரை விரிவாக்கிய மாநிலம் தமிழகம். மாநில அரசின் பொது விநியோக திட்டம் அனைத்து மக்களின் உணவு பாதுகாப்பு உறுதி செய்கிறது என பல்வேறு விஷயங்களை பேசினார். முன்னதாக ஆளுநர் உரையை திமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.