தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது

 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் 2-ம் தேதி (இன்று) கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

நடப்பாண்டில் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றித் தொடங்கி வைக்க உள்ளார். ஆளுநர் ஆங்கில உரையை படித்தபின், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தமிழில் படிப்பார்.

மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில், எத்தனை நாட்களுக்கு கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும். ஆளுநர் உரை மீதான விவாதம், மானிய கோரிக்கை விவாதம் போன்றவை குறித்தும் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

கஜா புயல் நிவாரணம், ஸ்டெர்லைட், மேகேதாட்டு, ஊழல் முறைகேடுகள், கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களை இந்த கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.