தமிழக கோவில் சிலைகள் பற்றிய உண்மையை வெளிக்கொணர வேண்டும் : மு.க ஸ்டாலின் ட்வீட் !

 

தமிழக கோவில் சிலைகள் பற்றிய உண்மையை வெளிக்கொணர வேண்டும் : மு.க ஸ்டாலின் ட்வீட் !

சிலை கடத்தல் தொடர்பான மொத்த ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி,  17,790 பக்கங்கள் கொண்ட ஆவணத்தைத் தமிழக அரசிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்தார். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதனால், சிலை கடத்தல் தொடர்பான மொத்த ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி,  17,790 பக்கங்கள் கொண்ட ஆவணத்தைத் தமிழக அரசிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்தார். 

ttn

சிலைகள் தொடர்பான 50 தொன்மை சான்றுகள் ஒப்படைக்கப்படவில்லை என்று தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து, எஞ்சியுள்ள ஆவணங்களை ஒப்படைக்க நீதிமன்றம் 2 வாரம் கால அவகாசம் அளித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய அதிகாரியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சிலை கடத்தல் தொடர்பான உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், ” தமிழக கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கை விசாரித்து வந்த காவல்துறை உயரதிகாரி, அதிமுக அமைச்சர்களைக் குற்றம்சாட்டி இருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை ஏடிஜிபி-யிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரி அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் ” என்று பதிவிட்டுள்ளார்.