தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்; புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

 

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்; புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, கே.எஸ்.அழகிரியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, கே.எஸ்.அழகிரியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே ஒலித்து வந்தன. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் எனவும் அக்கட்சிக்குள் சலசலக்கப்பட்டது.

இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் குறித்த முக்கிய முடிவை எடுக்க தில்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், குஷ்பு உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, கே.எஸ்.அழகிரியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.