தமிழக எம்.பி மீது கத்தி வீச்சு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் 

நாகப்பட்டினம் தொகுதி எம்.பி. செல்வராஜ், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து  வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடியே தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சென்றுக் கொண்டிருந்த வாகனம் அகஸ்தியன்பள்ளி பகுதியில் கடந்து செல்லும் போது லட்சுமணன், வேதமணி, லோகு ஆகிய மூவரும் தங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள்  இருப்பதாக தெரிவித்ததுடன், தகாத வார்த்தைகளால் எம்.பி. செல்வராஜை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் எம்பி செல்வராஜை விமர்சித்துக் கொண்டிருக்கும் போது, அந்த மூவரில் ஒருவர் எம்பி செல்வராஜ் மீது கத்தியை வீசியுள்ளார். ஆனால் அப்படி அவர் வீசிய கத்தி  யார் மீதும் படாமல், எம்பி செல்வராஜ் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது பட்டு கீழே விழுந்ததால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் தப்பித்தார். 
உடனே இதுகுறித்து வேதாரண்யம் பகுதி காவல் நிலையத்தில் எம்.பி.செல்வராஜ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார், தலைமறைவான அந்த மூன்று நபர்களையும் தேடி வருகின்றனர். தன் தொகுதியில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க சென்று எம்பியின் மீது கத்தி வீச முற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.