தமிழக அரசு வாங்கிய 24,000 ரேபிட் கருவிகள் திருப்பி அனுப்பப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

 

தமிழக அரசு வாங்கிய 24,000 ரேபிட் கருவிகள் திருப்பி அனுப்பப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவியதால், கொரோனா வைரஸை 30 நிமிடங்களில் கண்டறியும் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீனாவிடம் ஆர்டர் செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 16 ஆம் தேதி 6,50,000 கருவிகள் இந்தியாவுக்கு வந்தது.  ரியல் மெடபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசியுடிகல்ஸ் என்னும் நிறுவனம் சீனாவிடம் இருந்து ரூ.245க்கு வாங்கி ரூ.600க்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. தமிழக அரசும் 50,000 ரேபிட் கிட் கருவிகளை 600 ரூபாய்க்கு ஷான் பையோடெக் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாக தெரிகிறது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ttn

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு வாங்கியுள்ள 24,000 ரேபிட் கிட் கருவிகள் திருப்பி அனுப்பப்படும். கருவிகள் திருப்பி அனுப்பப்படுவதால் தமிழக அரசுக்கு எந்த செலவும் ஏற்படாது. மத்திய அரசு அனுமதி அளித்த, மத்திய அரசு அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள கொள்முதல் ஆணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் லாபம் அடையும் முயற்சியை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.