தமிழக அரசு ‘எடுத்தோம் கவுத்தோம்’ என செயல்படுகிறது: டிடிவி தினகரன் விமர்சனம்!

 

தமிழக அரசு ‘எடுத்தோம் கவுத்தோம்’ என செயல்படுகிறது: டிடிவி தினகரன் விமர்சனம்!

அதனை விமர்சித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800ஐ எட்டியுள்ளது. அதனை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் நேற்று கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி கடைகளில், சமூக விலகலை காற்றில் பறக்க விட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனை விமர்சித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ttn

அதில், ” எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமி மனதில் தோன்றியதை எல்லாம் திடீரென்று அறிவிப்புகள் வெளியிடுதாக நோய்த்தொற்றை ஆட்சியாளர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடுவார்களோ என்ற பயம் தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்த புதுக்கோட்டை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நோய் தற்போது பரவி இருக்கிறது. நோய்த்தொற்று சமூக பரவல் என்னும் மூன்றாவது நிலைக்கு போய் விட்டதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நான்கைந்து நாட்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தார். ஆனால் தமிழக அரசு சார்பில் அது பற்றி எந்தவிதமான முறையான அறிவிப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

மாவட்டங்களில் உள்ளூர் நிர்வாகங்களை அவரவர் நினைத்தபடி செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநகராட்சிகள் தனிப் பாதையில் பயணிக்க எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டிய தலைமைச் செயலகமும் ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என முடிவுகளை எடுக்கும் நவீனத்துவ கூடாரமாக மாறி நிற்பது மக்களிடம் கொரோனாவை விட பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏப்ரல் 26ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு என்று நேற்று முன்தினம் பிற்பகலில் அதிரிபுதிரி ஆக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். திடீர் திடீரென வெளியான இத்தகைய அறிவிப்புகளில் பதற்றமடைந்த மக்கள் அதுவரை கடைப்பிடித்து வந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டு கடைகளிலும் சந்தைகளிலும் கூட வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது.

கடைகளில் விற்பனை நேரம் நீட்டிக்கப்படும் என்று அறிவிப்பை கூட மிகத் தாமதமாக வெளியிட்டு அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் காண்பித்தார்கள். அதிலும் தமிழக அளவில் குறைவால் பாதிக்கப்பட்டு அவர்கள் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கு பேர் இருக்கிற தலைநகர் சென்னையில் தலைமை மோசமாக இருந்தது. கோயம்பேடு சந்தையில் மட்டும் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிற மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடிய காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 ஏற்கனவே தேசிய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட பெரு நகரங்களின் பட்டியலில் உள்ள சென்னையில் ஆட்சியாளர்களைக் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பீதி இக் காட்சிகளை பார்த்து அனைவரிடமும் ஏற்பட்டிருக்கிறது. கோயம்பேடு மட்டுமின்றி திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் இருக்கிற சந்தைகளில் தனிமனிதர்கள் காற்றில் பறக்கவிடப்பட்டு அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத இது பெரும் கவலையை தந்துள்ளது. 

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறையினர்  என பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக தவறுக்கு மேல் தவறுகளை செய்யாமல் அரசு நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் அனுபவம் வாய்ந்த ஆட்சிப்பணி அதிகாரிகள் அவர்களுக்கு புரிகிற வகையில் எடுத்து கூறி சரியான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கிறது. இனியாவது ஆட்சியாளர்களும் ஆட்சிப்பணி அதிகாரிகள் இதனை மனதில் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.