தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு!

 

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து வரும் 11 ஆம் தேதி முதல் படத்தொகுப்பு, குரல் பதிவு, கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ், டிஐ எனப்படும் நிறகிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளுக்கு மட்டும் அதிகபட்சம் 5 பேருடன் பணியாற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியது.

 

 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் நடிகை குஷ்பு, “திரைத்துறை மற்றும் சின்னதிரைகளில் படப்படிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்த செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முதல்வர் பழனிசாமிக்குச் சின்னதிரை சார்பாக மிகப் பெரிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் செழிப்பாகும். இதன்மூலம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது கடைமட்ட திரைத்தொழிலாளர்களுக்கு உறுதியாக கிடைக்கும்” என பதிவிட்டுள்ளார்.