தமிழக அரசின் நேரக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்!

 

தமிழக அரசின் நேரக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களான காய்கறி அங்காடிகள், டாஸ்மாக், உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களான காய்கறி அங்காடிகள், டாஸ்மாக், உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது. அதன் பிறகு மக்களின் வசதிக்காக நேரக்கட்டுப்பாடுகளுடன் அவை செயல்பட அரசு அனுமதி அளித்தது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில், அடையாள அட்டைக் கொண்ட வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது.

ttn

இந்நிலையில், பெட்ரோல் பங்க், காய்கறி அங்காடி, மளிகை கடைகள்  உள்ளிட்டவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை செயல்பட வேண்டும் என்ற அரசின் கட்டுப்பாடு  இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

ttn

அதன் படி கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து காய்கறி அங்காடிகளுக்கு வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி வைத்த பின்னர், விற்பனை தொடங்கும். அனைத்து கடைகளும் இன்று பிற்பகல் 2:30 மணி வரை செயல்படும். ஆனால், பார்சல்கள் வழங்கும் உணவகங்களும் மெடிக்கல்களும் நாள் முழுவதும் செயல்படும். மேலும், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7-9:30,மதியம் 12- பிற்பகல் 2:30 மற்றும் மாலை 7-9 ஆகிய நேரங்களில் மட்டுமே செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.