தமிழக அரசின் செயல்பாடு கொரோனாவை கட்டுப்படுத்த உதவாது! – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

 

தமிழக அரசின் செயல்பாடு கொரோனாவை கட்டுப்படுத்த உதவாது! – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

தமிழகத்தில் வெளிநாடுக்குச் சென்று திரும்பியவர்கள் கொரோனா பீதி காரணமாக மருத்துவமனைக்கு வரும் நிலையில் அவர்களுக்கு சாதாரண மாத்திரை கொடுத்து அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு, வேறு பணிகளில் ஈடுபடுத்த ஆசிரியர்களை வரவழைப்பது உள்ளிட்ட செயல்கள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வெளிநாடுக்குச் சென்று திரும்பியவர்கள் கொரோனா பீதி காரணமாக மருத்துவமனைக்கு வரும் நிலையில் அவர்களுக்கு சாதாரண மாத்திரை கொடுத்து அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து வருவதாகவும் இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு இல்லை என்று காட்ட தமிழக அரசு பகீரத முயற்சி மேற்கொள்வதாகவும் இதனால் கொரோனா அச்சம் காரணமாக வருபவர்களை அப்புறப்படுத்தவே முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

corona virus

இந்த நிலையில் சந்தேகிக்கப்படும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “Test, test, test. Test every suspected case. சோதனை செய், சோதனை செய், சோதனை செய். கொரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதனை செய்யுங்கள் என்பது தான் கொரோனா தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனை ஆகும். அதை மதித்து கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்!

corona

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வருபவர்களுக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த சோதனையை உள்ளூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். விமான நிலையம், துறைமுகங்களின் பணியாளர்களுக்கும் கொரோனா ஆய்வு நடத்த வேண்டும்!

 

கூட்டம் கூடுவதால் கொரோனா பரவுவதை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவை. கூடுதலாக, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் அரசு அலுவலகங்கள்,  வாராந்திர சந்தைகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

 

மற்றொரு ட்வீட்டில், “பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அவற்றின் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் தடுப்புக்கு இது உதவாது.நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க, பொதுத்தேர்வு  பணியில் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.