தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றது ‘சிந்தகமானிபெண்டா’ அரசுப் பள்ளி !

 

தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றது ‘சிந்தகமானிபெண்டா’ அரசுப் பள்ளி !

கடந்த 2015 ஆம் ஆண்டு, எவ்வித சலுகையும் வழங்கப்படாத அந்த பள்ளிக்குத் தனது சொந்த செலவில் திறன் பலகை உருவாக்கி மாணவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார். 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ‘சிந்தகமானிபெண்டா’ மலைக் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஆரம்பக் காலத்தில் இந்த பள்ளியின் தரம், அவ்வளவாக நன்றாக இல்லை என்றாலும் 2015 ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறந்த பள்ளியாக விளங்கியுள்ளது. அதற்கு காரணம் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் அருண்குமார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, எவ்வித சலுகையும் வழங்கப்படாத அந்த பள்ளிக்குத் தனது சொந்த செலவில் திறன் பலகை உருவாக்கி மாணவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார். 

ttn

ஆசிரியரின் இந்த செயல் அனைத்து ஊடகங்களிலும் பரவியதை அடுத்து, அருண்குமாருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இதனால் அவருக்குக் கனவு ஆசிரியர் உட்படப் பல விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலே இந்த ஆண்டிற்கான சிறந்த பள்ளி விருதைத் தமிழக அரசு சிந்தகமானிபெண்டா அரசுப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. இதனையறிந்த ஆட்சியர், ஆசிரியர் அருண்குமார் உள்ளிட்ட ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.