தமிழக அரசின் உத்தரவை மீறி 10,11,12 மாணவர்களுக்கு வகுப்பு… பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

 

தமிழக அரசின் உத்தரவை மீறி 10,11,12 மாணவர்களுக்கு வகுப்பு… பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்கும் வந்து விட்டது. இந்தியாவில் இதுவரை 129 பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்கும் வந்து விட்டது. இந்தியாவில் இதுவரை 129 பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்த படியே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ttn

அரசு உத்தரவை மீறி கல்வி நிறுவனங்கள் ஏதேனும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளில் 10,11,12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதனை விசாரித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தமிழக அரசின் உத்தரவை மீறிச் செயல்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.