தமிழக அரசின் அலட்சியம்… மின் கட்டணம் 300 சதவிகிதம் அதிகரிக்கும் அபாயம்! – எச்சரிக்கும் தொழிற்சங்கம்

தமிழக அரசின் அலட்சியம்… மின் கட்டணம் 300 சதவிகிதம் அதிகரிக்கும் அபாயம்! – எச்சரிக்கும் தொழிற்சங்கம்

தமிழக மின்சார வாரியத்துக்கு தற்போது, ஒரு லட்சத்து 33 யேரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்கு தனியார் மின் உற்பத்தியாளர்கள், காற்றாலை உற்பத்தியாளர்கள் அளிக்க வேண்டிய 15 ஆயிரம் நிலுவைத் தொகை வசூலிக்காதது உள்ளிட்ட காரணங்கள் உள்ளன.

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக மின்சார வாரியம் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், இதை சரிக்கட்ட மக்கள் தலையில் 300 சதவிகிதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட திட்டமிடப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழக மின்சார வாரியத்துக்கு தற்போது, ஒரு லட்சத்து 33 யேரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்கு தனியார் மின் உற்பத்தியாளர்கள், காற்றாலை உற்பத்தியாளர்கள் அளிக்க வேண்டிய 15 ஆயிரம் நிலுவைத் தொகை வசூலிக்காதது உள்ளிட்ட காரணங்கள் உள்ளன.

tamilnadu

இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
ஆனால், கடன் பிரச்னையை சமாளிக்க மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பாக மின்சார வாரிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கட்டணத்தை 300 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த திட்டமிப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாவது வெற்றியை பாதிக்கும் என்பதால் அரசு யோசித்து வருகிறது. நிலுவைத் தொகையை வசூலித்தாலே கட்டண உயர்வைத் தவிர்க்கலாம்” என்று கூறுகின்றனர்.