தமிழகம் வந்தடைந்த 1 லட்சம் RT – PCR சோதனைக் கருவிகள்.. சுகாதாரத்துறை தகவல்!

 

தமிழகம் வந்தடைந்த 1 லட்சம் RT – PCR சோதனைக் கருவிகள்.. சுகாதாரத்துறை தகவல்!

தமிழகம் முழுவதும் அந்த சோதனை கருவிகளை கொண்டு, சுமார் 2,16,000க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 

தமிழகத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோருக்கு அதன் அறிகுறி இல்லை என வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதனால், கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள 1.20 லட்சம்  RT – PCR சோதனைக் கருவிகள் வரவழைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அந்த சோதனை கருவிகளை கொண்டு, சுமார் 2,16,000க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 

ttn

கடந்த சில நாட்களை காட்டிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் இன்னும் அதிவேகமாக இருக்கிறது. அதனால் கூடுதலாக 1 லட்சம் RT – PCR கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர. மேலும், விரைவில் அந்த கருவிகள் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு கொரோனா மொத்தம் 2.20 லட்சம்  RT – PCR கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேலும் 10 லட்சம் கருவிகளை தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.